கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள 'விக்ரம்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு..!


கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள விக்ரம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு..!
x
தினத்தந்தி 11 May 2022 8:32 PM IST (Updated: 11 May 2022 8:32 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள 'விக்ரம்' திரைப்படத்தின் 'பத்தல பத்தல' என்ற பாடல் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'விக்ரம்'. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ம் தேதி வெளியாக உள்ளது. விக்ரம் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வருகிற மே 15-ந்தேதி அன்று வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது.

நடிகர் கமல்ஹாசன் எழுதி, கமல்ஹாசன் மற்றும் அனிருத் இணைந்து பாடியுள்ள 'பத்தல பத்தல' என்று தொடங்கும் பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story