2 நாட்களில் 2 கோடி பார்வைகள்.. டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ள "பத்தலே பத்தலே"


2 நாட்களில் 2 கோடி பார்வைகள்.. டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ள பத்தலே பத்தலே
x
தினத்தந்தி 15 May 2022 4:48 AM GMT (Updated: 2022-05-15T10:18:41+05:30)

அனிருத் இசையில் கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள “பத்தலே, பத்தலே” என்ற படலானது கடந்த 11 ஆம் தேதி வெளியானது.

சென்னை,

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் என்ற திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது. அந்த படத்தில் அனிருத் இசையில் கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள “பத்தலே, பத்தலே” என்ற படலானது கடந்த 11 ஆம் தேதி இரவு வெளியானது. இந்தபாடலில், மத்திய அரசை விமர்சித்து வரிகள் உள்ளதாகவும், சாதி ரீதியான பிரச்சினைகளை தூண்டும் வகையிலும் வரிகள் இடம் பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்தது.

எனினும் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், தற்போது இந்த பாடல் இரண்டே நாளில் 2 கோடி பார்வைகளை கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. 


Next Story