டிரெண்டிங்கில் கமல்ஹாசனின் விக்ரம் பட டிரெய்லர்


டிரெண்டிங்கில் கமல்ஹாசனின் விக்ரம் பட டிரெய்லர்
x
தினத்தந்தி 16 May 2022 9:18 AM GMT (Updated: 16 May 2022 9:18 AM GMT)

விக்ரம் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் நேற்று வெளியானது.

சென்னை,

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'விக்ரம்'. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்திலிருந்து கமல்ஹாசன் எழுதி பாடியிருந்த 'பத்தல பத்தல' என்ற பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் விக்ரம் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் நேற்று வெளியானது. இந்த டிரைலர் தற்போது வெளியாகி 15 மணி நேரத்திற்குள் 10 மில்லியன் பார்வைகளை கடந்து யூடியூப்பில் தொடர்ந்து டிரெண்டிங்கில் உள்ளது.


Next Story