திருட்டு வழக்கில் 3 பேர் கைது
தாவணகெரேவில் திருட்டு வழக்கில் கைதான 3 பேரிடம் இருந்து ரூ.9 லட்சம் நகை, பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிக்கமகளூரு-
தாவணகெரே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரிஸ்யந்த் தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், தாவணகெரே மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக திருட்டு வழக்குகள் அதிகரித்து காணப்படுகிறது. இந்த திருட்டு வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்நிைலயில் நேற்று தாவணகெரே போலீசார் 3 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்காவை சேர்ந்த ரங்கநாத் (வயது 29), லோகேஷ் (32), ஈச்சலநாயக்கனஹட்டியை சேர்ந்த விஜய் (26) என்று தெரியவந்தது. கைதான 3 பேரிடம் இருந்து ரூ.9 லட்சம் மதிப்பிலான 106 கிராம் தங்கம், ஒரு கிலோ வெள்ளி, ரூ.5.35 லட்சம் ரொக்கப்பணம், ஒரு காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் 3 பேரும் தாவணகெரே பகுதியில் உள்ள சில இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து, நகை, பணத்தை திருடியுள்ளனர். எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளது என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.