காட்டு யானை-சிறுத்தை-பாம்பு மிரட்டல்களுக்கு மத்தியில் அடர்ந்த காடுகளில் வளர்ந்த படம்
காட்டு யானை-சிறுத்தை-பாம்பு மிரட்டல்களுக்கு மத்தியில் அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம் என படத்தின் டைரக்டர் கே.விவேக் தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி- திரிஷா நடித்து வெற்றிகரமாக ஓடிய '96' படத்தை தயாரித்தவர், நந்தகோபால். இவர் தயாரித்துள்ள புதிய படத்துக்கு, '13' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது சஸ்பென்ஸ்- திகில் கலந்த படம். ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க, ஆதியா, பவ்யா, ஐஸ்வர்யா ஆகிய 3 புது முகங்கள் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
கவுதம் வாசுதேவ் மேனன் துப்பறியும் அதிகாரியாக வருகிறார். கே.விவேக் டைரக்டு செய்துள்ளார். படத்தைப் பற்றி அவர் கூறியதாவது:-
"இந்தப் படத்தின் கதை சென்னையில் ஆரம்பித்து, கேரள காடுகளை நோக்கி பயணிக்கிறது. அதனால் படப்பிடிப்பை சென்னையில் தொடங்கி, கேரள காடுகளுக்குள் போய் நடத்தினோம். பெரும்பகுதி காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன. தினமும் காட்டு யானைகள், சிறுத்தைகள், மலை பாம்புகளை எதிர்கொண்டு உயிரைப் பணயம் வைத்து படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்.
படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்பும், பதற்றமும் இருக்கும்.