திருமண வதந்திக்கு அஞ்சலி விளக்கம்
அஞ்சலிக்கு திருமணம் முடிவாகி விட்டதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் புதிய தகவல் பரவி வருகிறது. இதற்கு அஞ்சலி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அஞ்சலி தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருக்கிறார். அஞ்சலிக்கு 36 வயது ஆகிறது. ஆனாலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. சில நடிகர்களுடன் அஞ்சலியை இணைத்து ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்து அடங்கியது. நடிகர் ஜெய்யுடன் காதல் மலர்ந்ததாகவும், பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டதாகவும் பேசினர். இதற்கெல்லாம் அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில் அஞ்சலிக்கு திருமணம் முடிவாகி விட்டதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் புதிய தகவல் பரவி வருகிறது. இதற்கு அஞ்சலி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ''நான் இப்போது திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இல்லை. திருமணத்தை பற்றி யோசிக்கவே இல்லை. ஆனாலும் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன். திருமணம் முடிவானதும் மறைக்காமல் எல்லோருக் கும் தெரியப்படுத்துவேன்" என்றார்.