நடிகர் ரஜினிகாந்த் திடீர் டெல்லி பயணம்


நடிகர் ரஜினிகாந்த் திடீர் டெல்லி பயணம்
x
தினத்தந்தி 6 Aug 2022 11:53 AM IST (Updated: 6 Aug 2022 12:00 PM IST)
t-max-icont-min-icon

நடிகர் ரஜினிகாந்த் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள ரஜினிகாந்த் இன்று காலை 10 மணிக்கு டெல்லி செல்லும் விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

அண்ணாத்த' படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கி வரும் 'ஜெயிலர்' படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். 'எந்திரன்', 'பேட்ட', 'அண்ணாத்த' படங்களை தொடர்ந்து 4-வது முறையாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார்.இதற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.இந்த நிலையில் படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள ரஜினிகாந்த் டெல்லி புறப்பட்டுச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் சினிமா படப்பிடிப்பு தொடர்பாக பங்கேற்று ஒரு வாரம் கழித்து சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.



Next Story