இருட்டு பயத்தில் நடிகை அலியாபட்


இருட்டு பயத்தில் நடிகை அலியாபட்
x

இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் அலியாபட். அதிரடி சண்டை படங்களில் வீர தீரமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் அலியா பட்டுக்கு இருட்டை கண்டால் பயமாம்.

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் "எனக்கு இருட்டை பார்த்தால் பயம். இதை நிக்டோபோபியா என்று சொல்கிறார்கள். சிறுவயதில் எனை பயமுறுத்த அக்கா, விளையாட்டாக இருட்டு அறையில் என்னை வைத்து வெளியே தாழிட்டுவிட்டார். அதன் பிறகு அதை அவர் மறந்துவிட்டார். நிறைய நேரத்திற்கு பிறகு அவருக்கு நினைவு வந்து ஓடி வந்து கதவை திறந்தார். ஆனால் அதற்குள் நான் அழுது புலம்பி பயத்தில் விரைத்துவிட்டேன். அதனாலேயே எனக்கு இருட்டு என்றால் சிறு வயது முதலே பயம்.

லைட் இருந்தால் தான் என்னால் தூங்க முடியும். ஆனால் அதை எதிர்கொள்ள வேண்டும் என முடிவு செய்தேன். அறையில் விளக்குகளை அணைத்துவிட்டு படுக்க முயற்சி செய்தேன். ஆனாலும் ஜன்னல் திரைகளை திறந்தே வைப்பேன். எனக்கு தோல்வி என்றால் கூட மிகவும் பயம். அதனால் தான் அதிகமாக பலமடங்கு உழைக்கிறேன். ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து தான் முடிவு எடுப்பேன்'' என்றார்.


Next Story