'எல்லா இடமும் நம்ம இடம் தான்' - நடிகர் விஜயின் 'வாரிசு' பட டிரைலர் வெளியானது...!
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.
சென்னை,
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. வரும் 12-ம் தேதி ரிலீஸ் ஆகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
மேலும், இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் 'ரஞ்சிதமே' மற்றும் 'தீ தளபதி', 'சோல் ஆப் வாரிசு' பாடகள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.
இந்நிலையில், வாரிசு படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டிரைலர் வெளியீடப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திலும், ஆர்வத்திலும் இருந்தனர்.
வாரிசு படத்தின் டிரைலரை பல்வேறு தியேட்டர்களில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. அதனால் தியேட்டர்களில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் மேள தாளங்கள் முழங்க டிரைலருக்காக காத்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில், வாரிசு படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது. அந்த டிரைலரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர்.