நடிகர் விஜய் படத்தில் அர்ஜுன் வில்லனாக நடிப்பது உறுதியானது


நடிகர் விஜய் படத்தில் அர்ஜுன் வில்லனாக நடிப்பது உறுதியானது
x

லோகேஷ் கனகராஜ் இயக்கதில் விஜய் நடிக்கும் படத்தில் அர்ஜுன் வில்லனாக நடிப்பது உறுதியானது.

வாரிசு படத்தை முடித்துவிட்டு, லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ளார். தயாரிப்புக்கு முந்தைய பணிகளை படக்குழுவினர் தொடங்கி உள்ளனர். கதாநாயகியாக நடிக்க திரிஷாவுக்கு வாய்ப்பு உள்ளதாகவும், இன்னொரு நாயகியாக நடிக்க சமந்தாவிடம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதில் விஜய்க்கு 50 வயது தாதா கதாபாத்திரம் என்றும், அவருக்கு வில்லன்களாக 6 முன்னணி நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் ஏற்கனவே தகவல்கள் கசிந்தன. கைதி, விக்ரம் படங்களைபோல் முழு அதிரடி கதையம்சத்தில் இந்த படம் தயாராக உள்ளதாகவும் தகவல்.

வில்லன் வேடத்துக்கு இந்தி நடிகர் சஞ்சய்தத், மலையாள நடிகர் பிருதிவிராஜ் ஆகியோர் பெயர்கள் அடிபட்டன. நடிகர்கள் விஷால், அர்ஜுன் ஆகியோரையும் படக்குழுவினர் அணுகி வில்லனாக நடிக்க பேசி வந்தனர்.

இந்த நிலையில் அர்ஜுன் வில்லனாக நடிப்பது தற்போது உறுதி செய்யப்பட்டு உள்ளது. கதை, கதாபாத்திரம் பிடித்து இருந்ததால் விஜய்க்கு வில்லனாக நடிக்க அர்ஜுன் சம்மதம் தெரிவித்து உள்ளார். படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கும் என்று தெரிகிறது.


Next Story