அருண் விஜய் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு....!
'பார்டர்' திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை,
இயக்குனர் அறிவழகன் மற்றும் அருண் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'பார்டர்'. இப்படத்தில் நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். விஜய ராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பு பணிகளை சாபு ஜோசப் மேற்கொண்டுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த வருடம் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வந்த சமயத்தில் சில காரணங்களால் படம் வெளியாகாமல் தள்ளிப் போனது. இதையடுத்து இப்படம் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு வெளியாகவில்லை. இந்நிலையில், 'பார்டர்' திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
.@All_In_Pictures's #ArunVijayInBorrder Is on a mission to conquer the audience from 24th Feb 2023 #BorrderFromFeb24
— All In Pictures (@All_In_Pictures) December 28, 2022
An @dirarivazhagan Film
Starring @arunvijayno1 @ReginaCassandra @StefyPatel @SamCSmusic @UmeshPranav @Viwinsr @11_11cinema @prabhuthilaak @DopRajasekarB pic.twitter.com/OTqpaNBvUe