நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்டு


நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்டு
x

நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தெலுங்கு நடிகர் வைஷ்னவ் தேவ், கிர்த்தி ஷெட்டி ஆகியோர் நடிப்பில் உருவான படம் உப்பெனா. இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். தெலுங்கு மொழியில் வெளியான இப்படத்தை தமிழில் மறு உருவாக்கம் செய்ய அந்த படத்தில் வில்லனாக நடித்து நடிகர் விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனம் வாங்கியதாக தகவல் வெளியானது.

இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய விஜய் சேதுபதிக்கு தடை விதிக்கக் கோரி தேனியை சேர்ந்த டல்ஹவுசி பிரபு என்ற உதவி இயக்குனர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். உலக மகன் என்ற தனது கதையை திருடி உப்பெனா என்று உருவாக்கப்பட்டதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உப்பெனா படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை வாங்கவில்லை என்று நடிகர் விஜய் சேதுபதி தரப்பு நீதிபதியிடம், விளக்கம் அளித்தது. விஜய் சேதுபதியின் விளக்கத்தை ஏற்று கொண்ட நீதிபதி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.


Next Story