வரதட்சணை கொடுமையால் குழந்தைகளைகொன்று, தாய் தற்கொலை செய்தது அம்பலம்


வரதட்சணை கொடுமையால் குழந்தைகளைகொன்று, தாய் தற்கொலை செய்தது அம்பலம்
x
தினத்தந்தி 21 Jan 2023 1:54 AM IST (Updated: 21 Jan 2023 12:52 PM IST)
t-max-icont-min-icon

மாலூரில் வரதட்சணை கொடுமையால் இளம் பெண் ஒருவர் தனது 2 குழந்தைகளை ஏரியில் வீசி கொலை செய்துவிட்டு பின்னர் அவரும் குதித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோலார் தங்கவயல்,

3 பேரின் உடல் மீட்பு

கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா, சொக்கண்டஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வேணுகோபால், விவசாயி. இவருக்கும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பேபி (வயது 35) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இத்தம்பதிக்கு தர்ஷினி (3), மற்றும் காவியாஸ்ரீ என்ற 9 மாத கை குழந்தைகள் இருந்தது. கடந்த சில நாட்களாக கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை குழந்தைகளுடன் வீட்டின் இருந்து வெளியே சென்ற பேபி பின்னர் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை தேடி அழைந்தனர். இந்நிலையில் அன்றய தினம் மாலையில் அதே கிராமத்தில் உள்ள தொட்டகெரே ஏரியில் குழந்தைகள் மற்றும் பேபியின் உடல் மிதந்தது. இதை பார்த்த கிராம மக்கள் குடும்பத்தினருக்கும் மாலூர் போலீசாருக்கு தகவல் அறித்தனர்.

குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பேபிக்கும் அவரது கணவருக்கும் இடையே வரதட்சணை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்ததாவும், அடிக்கடி தாய் வீட்டிற்கு சென்று பணம் வாங்கி வரும்படி கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் கோபம் அடைந்த பேசி தனது 2 குழந்தைகளையும்

வீட்டில் இருந்து அழைத்து சென்று தொட்டகெரே ஏரியில் வீசியுள்ளார். பின்னர் அவர் அதே ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவந்தது. இந்த தற்கொலை குறித்து பேபியின் பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

வரதட்சணை கொடுமை

அவர்கள் மகள் மற்றும் பேத்திகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் இந்த தற்கொலைக்கு கணவன் வேணுகோபால்தான் காரணம். வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் மகள் இந்த முடிவை எடுத்துள்ளாள். எனவே வேணுகோபால் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குற்றம் சாட்டினர். மேலும் இது குறித்து பேபியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வேணுகோபாலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story