'தங்கலான்' டிரெய்லர் குறித்து வெளியான தகவல்


Chiyaan Vikrams period drama Thangalaan’s trailer to DROP soon: Heres what we know
x

'தங்கலான்' பட டிரெய்லர் வெளியாகும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இந்த படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எப் குறித்த கதை என்று இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விக்ரமின் தோற்றம் மற்றும் மிரட்டலான நடிப்பு உள்ளிட்டவை ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இயக்குனர் பா.ரஞ்சித், கடந்த ஜனவரி 26-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. தற்போது இப்படம் சுதந்திர தினத்தன்று வெளியாக உள்ளதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 2 நிமிடம் 12 வினாடிகள் கொண்ட டிரெய்லர் தயாரிப்பாளர்களால் இறுதி செய்யப்பட்டுவிட்டது என்றும் வரும் 8-ம் தேதி வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


Next Story