காமெடி நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
நேற்று இரவு முதல் ராஜூ ஸ்ரீவஸ்தவாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
புதுடெல்லி,
இந்தி திரையுலகில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் அறியப்படுபவர் ராஜூ ஸ்ரீவஸ்தவா (வயது 59). இவர் கடந்த 10 ஆம் தேதிடெல்லியில் உள்ள ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென சரிந்து விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதற்காக அவர் தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் ராஜு ஸ்ரீவஸ்தவாவின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது. நேற்று இரவு முதல் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
அவர் தொடர்ந்து வெண்டிலேட்டரில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் சுயநினைவு இன்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதய செயல்பாட்டை பராமரிக்க வழங்கப்பட்ட சாதனங்கள் மட்டுமே குறைக்கப்பட்டுதாக தெரியவந்துள்ளது.