வெங்கட் பிரபுவுக்கு இளையராஜா தெலுங்கில் வீடியோ வெளியிட்டு வாழ்த்து..!


வெங்கட் பிரபுவுக்கு இளையராஜா தெலுங்கில்   வீடியோ வெளியிட்டு வாழ்த்து..!
x

வெங்கட் பிரபுவுக்கு இளையரஜா தெலுங்கில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்

சென்னை,

மாநாடு,மன்மத லீலை' படங்களை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்து வருகிறார். தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் புதிய தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது அதன்படி இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது .மேலும் இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தெலுங்கில் இயக்குனராக அறிமுகம் ஆகும் வெங்கட் பிரபுவுக்கு இளையரஜா வீடியோ வெளியிட்டு தெலுங்கில் வாழ்த்து தெரிவித்து உள்ளார் .இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .


Next Story