டுவிட்டரில் தனுஷ் சாதனை


டுவிட்டரில் தனுஷ் சாதனை
x

நடிகர் தனுசை டுவிட்டரில் பின் தொடர்வோர் எண்ணிக்கை 1 கோடியே 10 லட்சமாக உயர்ந்துள்ளது.

நடிகர் தனுசை டுவிட்டரில் பின் தொடர்வோர் எண்ணிக்கை 1 கோடியே 10 லட்சமாக உயர்ந்துள்ளது. வேறு எந்த தமிழ் நடிகர்களும் இந்த எண்ணிக்கையை தொடவில்லை என்பதால் தனுஷ் ரசிகர்கள் இதனை சாதனையாக கொண்டாடி வருகிறார்கள். தனுஷ் ராஞ்சனா, ஷமிதாப், அந்த்ராங்கி ரே ஆகிய இந்தி படங்களில் நடித்து வட இந்தியாவிலும் அதிக ரசிகர்களை சேர்த்துள்ளார். தி கிரே மேன் ஹாலிவுட் படத்தில் நடித்து உலக அளவிலும் பிரபலமானார். எனவேதான் அவருக்கு டுவிட்டரில் பின் தொடர்வோர் எண்ணிக்கை மளமளவென உயர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த வருடம் தனுசுக்கு டுவிட்டரில் 1 கோடி பேர் இருந்தனர். இப்போது புதிதாக மேலும் 10 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் வெற்றி பெற்றது. செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் இம்மாத இறுதியில் திரைக்கு வருகிறது. தொடர்ந்து தமிழ், தெலுங்கில் தயாராகும் வாத்தி படத்தில் நடித்து வருகிறார்.


Next Story