இயக்குநர் பாரதிராஜா மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றம்..!


இயக்குநர் பாரதிராஜா மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு மாற்றம்..!
x

கோப்புப்படம்

தினத்தந்தி 26 Aug 2022 8:48 AM GMT (Updated: 2022-08-26T14:27:54+05:30)

தி.நகர் தனியார் மருத்துவமனையில் இருந்து அமைந்தகரையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

சென்னை:

தமிழ் சினிமாவின் இயக்குனர் பாரதிராஜா சமீபத்தில் தனுஷுடன் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

இந்நிலையில் திடீரென கடந்த 23ஆம் தேதி நீர்சத்து குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

குறிப்பாக வயது முதிர்வு மற்றும் அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் கொரோனாவுக்கு பிந்தைய அறிகுறிகளான மூச்சு விடுதல் மற்றும் உடல் சார்ந்த சில பாதிப்புகளுக்கு அவர் ஆளானார். தொடர்ந்து அதற்கான சிகிச்சையும் மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் டாக்டர் நடேசன், கவிஞர் வைரமுத்து மற்றும் அவரின் குடும்பத்தினரின் ஆலோசனை படி தி.நகரில் உள்ள மருத்துவமனையில் இருந்து அமைந்தகரையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதற்கிடைய, பாரதிராஜா விரைவில் குணமடைய வேண்டி, சினிமா பிரபலங்களும், அவரது நண்பர்களும், தமிழ் ரசிகர்களும் கடவுளிடம் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


Next Story