'தளபதி 67' - விஜயுடன் கைகோர்த்து சம்பவம் செய்ய தயாரான லோகேஷ் கனகராஜ்
தமிழ் திரைத்துறையில் மாநகரம் படம் மூலம் டைரக்டராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ்.
சென்னை,
தமிழ் திரைத்துறையில் மாநகரம் படம் மூலம் டைரக்டராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கார்த்தி நடிப்பில் கைதி, விஜய் நடிப்பில் மாஸ்டர், கமல் நடிப்பில் விக்ரம் ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் திரைத்துறையில் லோகேஷ் கனகராஜ் முத்திரை பதித்தார்.
விக்ரம் வெற்றிக்கு பின் டைரக்டர் லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் யாரை வைத்து எடுப்பார் என்று ரசிகர்கள் மிகுந்த ஆவல் அடைந்தனர். எதிர்பார்ப்பு எகிறிய நிலையில் மாஸ்டர் படத்திற்கு பின் 2வதாக விஜயை வைத்து லோகேஷ் மீண்டும் படம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகின.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் விஜய் நடிக்க உள்ளார் என்பது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் டைரஷனில் விஜய் படம் நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது. இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த திரைப்படம் 'தளபதி 67' என்று பெயரிடப்பட்டு விஜய் நடிப்பில் லோகேஷ் டைரக்ஷனில் , அனிருத் இசையில் தொடங்க உள்ளது.
லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் விஜய் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அடுத்தடுத்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனது டைரக்ஷனில் விஜய் நடித்துவரும் புதிய படம் தொடர்பாக அப்டேட்டை லோகேஷ் கனகராஜ் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விஜய் - லோகேஷ் கனகராஜ் இருவரும் தங்கள் கையில் காப்பு வைத்திருக்கும் புகைப்படத்தை பார்த்த லோகேஷ், மாலைவணக்கம் நண்பர்களே, தளபதி 67-ல் விஜய் அண்ணாவுடன் மீண்டும் கைகோர்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது' என டுவிட் செய்துள்ளார்.