இனி நடிப்பாரா என்பது சந்தேகம்... நயன்தாராவுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை
நயன்தாராவுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறாராம். அதனால் இனிமேல் அவர் நடிப்பது சந்தேகம். பட தயாரிப்பில் மட்டும் கவனம் செலுத்துவார் என்று அவருடைய நண்பர்கள் கூறுகிறார்கள்.
நயன்தாரா டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலிப்பதற்கு முன்பு சிம்பு, பிரபுதேவா ஆகிய இருவரிடமும் காதலில் விழுந்தார். அந்த இரண்டு பேரிடமும் திருமணம் வரை நெருங்கினார். சிம்புவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார். பிரபுதேவா மூலம் குழந்தை பெற்றுக்கொண்டு சினிமாவில் இருந்து விலக ஆசைப்பட்டார். இதற்கு பிரபுதேவா சம்மதிக்கவில்லை.
அதனால் நயன்தாராவின் ஆசை, நிராசையானது. அவர், பிரபுதேவாவை நேசித்த அளவுக்கு, அவரை பிரபுதேவா நேசிக்கவில்லை என்பதை தாமதமாக புரிந்து கொண்டார். அதனால் இருவரும் பிரிந்தார்கள். அந்த பிரிவு இருவரையும் கடுமையாக பாதித்தது.
இந்த நிலையில்தான் நயன்தாராவுக்குள் மூன்றாவது முறையாக காதல் பூ பூத்தது. அவருக்கும், இளம் டைரக்டர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் 7 வருடங்களாக காதலித்தார்கள். இந்த காதலாவது கல்யாணத்தில் முடிய வேண்டும் என்று நயன்தாரா ஆசைப்பட்டார். அவருடைய ஆசை நிறைவேறியது.
அதைத்தொடர்ந்து நயன்தாராவுக்குள் இன்னொரு ஆசை முளைவிட்டது. அது, வேறு ஒன்றுமல்ல. சீக்கிரமே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான். இது, எல்லா பெண்களுக்கும் வருவதுதான்.. நயன்தாராவுக்குள் கொஞ்சம் தாமதமாக வந்தது. அவருடைய மூன்றாவது காதலரும் கணவருமான விக்னேஷ் சிவன் மூலம் சீக்கிரமே குழந்தை பெற்றுக்கொள்ள அவர் ஆசைப்படுகிறாராம். இந்த ஆசையை அவருடைய நெருக்கமான நண்பர் களிடம் அவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
இதற்கு வசதியாக அவர் இனிமேல் நடிக்க மாட்டார் என்கிறார்கள். இனிமேல் அவர் நடிப்பது சந்தேகம். பட தயாரிப்பில் மட்டும் கவனம் செலுத்துவார் என்று அவருடைய நண்பர்கள் கூறுகிறார்கள்.