பிரபல நடிகை மரணம்
சிகிச்சை பலனின்றி பிரபல நடிகை ரஜீதா கோச்சார் மரணம் அடைந்தார்.
பழம்பெரும் இந்தி நடிகை ரஜீதா கோச்சார். இவர் 'பியா கா கர்' மற்றும் கங்கனா ரணாவத்தின் 'மணிகர்னிகா: தி குயின் ஆப் ஜான்சி' உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். கஹானி கர் கர் கி, தந்திரம், கவாச், ஹாதிம் உள்பட ஏராளமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்தும் பிரபலமானார். ரஜீதா கோச்சாருக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பக்கவாத நோயாலும் பாதிக்கப்பட்டார். மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீரக கோளாறும் இருந்தது.
இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடினர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி ரஜீதா கோச்சார் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 70. ரஜீதா கோச்சாரின் கணவர் ராஜேஷ் கோச்சாரும், மகள் கபிஷாவும் இங்கிலாந்தில் உள்ளனர். அவர்கள் இந்தியா திரும்பி உள்ளனர்.
Related Tags :
Next Story