துணிவு படத்தின் புதிய அப்டேட்.....ரசிகர்கள் உற்சாகம்


துணிவு படத்தின் புதிய அப்டேட்.....ரசிகர்கள்  உற்சாகம்
x
தினத்தந்தி 16 Dec 2022 8:05 PM IST (Updated: 16 Dec 2022 8:06 PM IST)
t-max-icont-min-icon

இப்படம் குறித்த புதிய தகவலை இயக்குனர் எச்.வினோத் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்

சென்னை,

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'துணிவு'. இந்த படம் வங்கி கொள்ளையை மையமாக வைத்து தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், உண்மை கதையில் அஜித் நடித்து வருவதாக தகவல் வெளியானது.

இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான 'சில்லா சில்லா' பாடல் கடந்த 9-ஆம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றது

இந்நிலையில், இப்படம் குறித்த புதிய தகவலை இயக்குனர் எச்.வினோத் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில், துணிவு படத்தில் நடிகர் அஜித்தின் லுக்கில், ஒரு சின்ன முன்னோட்டத்தை பார்த்ததற்கே ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். இதன்பின்னர் நாங்கள் வெளியிடவுள்ள புரொமோக்களை பார்த்தால், ரசிகர்கள் என்ன செய்வார்கள் என தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Related Tags :
Next Story