தனுஷ் இயக்கும் படத்தின் தலைப்பு இதுதானா..? வெளியான புதிய தகவல்
மீண்டும் இயக்குனராக களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியானது.
சென்னை,
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான தனுஷ் பாடகர், தயரிப்பாளர், பாடலாசிரியர் என பல்வேறு பரிணாமங்களில் அசத்தி வருகிறார். இவர் மீண்டும் இயக்குனராக களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியானது. தனுஷ் இயக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் பிரமாண்டமாக உருவாக உள்ள இப்படத்தில் நடிப்பவர்களின் விவரம் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், இவர் இயக்கும் படத்தின் தலைப்பு குறித்த செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு 'ராயன்' என தனுஷ் தலைப்பு வைத்துள்ளதாகவும் வட சென்னையை மையமாக வைத்து இப்படம் உருவாகவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இப்படத்தில் காளிதாஸ் ஜெயராமன், துஷாரா விஜயன் நடிக்கவுள்ளதாகவும் சமூக வலைதளத்தில் செய்தி பரவி வருகிறது.
Related Tags :
Next Story