உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு..!


உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு..!
x

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

சென்னை,

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் திரைப்படம் 'மாமன்னன்'. இந்த திரைப்படத்தில் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாள் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கிய 'மாமன்னன்' திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஏப்ரலில் நிறைவடைந்தது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இதுகுறித்த புகைப்படங்களை உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர், அடுத்த கட்ட படப்பிடிப்பு கீர்த்தி சுரேஷ் மற்றும் பகத் பாசில் தேதி கொடுத்த பிறகு தான் என்று நகைச்சுவையாக கூறியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



Next Story