10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம் - கமல்ஹாசன்


10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம் - கமல்ஹாசன்
x

தேசிய விருது பெற்றவர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்

சென்னை,

2020-ம் ஆண்டிற்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் நடிகர் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஓடிடியில் வெளியான 'சூரரைப்போற்று' திரைப்படம் சிறந்த நடிகர், நடிகை, படம், பின்னணி இசை மற்றும் திரைக்கதை என 5 தேசிய விருதுகளை அள்ளியது.

மேலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களுக்கு சிறந்த தமிழ் படத்திற்கான விருதும், சிறந்த எடிட்டிங்கிற்கான விருது எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்திற்கும், சிறந்த துணை நடிகைக்கான விருது லட்சுமி பிரியா சந்திரமவுலிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த வசனத்திற்கான தேசிய விருது மண்டேலா படத்தின் இயக்குநர் மடோனா அஸ்வினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அவருக்கு சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேசிய விருது பெற்றவர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;

சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளைக் குவித்துள்ளது பெருமையளிக்கிறது. சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், மண்டேலா என ஒட்டுமொத்தமாக 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம். விருதாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.என தெரிவித்துள்ளார்.


Next Story