நடிகை வாழ்க்கை கதையில் கங்கனா


நடிகை வாழ்க்கை கதையில் கங்கனா
x

பெங்காலி நாடகங்களில் நடித்துள்ள புகழ்பெற்ற நாடக நடிகையான பினோதினி தாசியின் வாழ்க்கை கதையில் கங்கனா ரணாவத் நடிக்கிறார்.

தேவதாசி குடும்பத்தில் பிறந்த பினோதினி 9-ம் நூற்றாண்டில் ஏராளமான நாடகங்களில் நடித்து இருக்கிறார். பெங்காலியில் இவரை டோடி பினோதினி என்று அழைக்கின்றனர்.

இவரது வாழ்க்கை கதை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தில் பினோதினி கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். பரிணிதா மர்தாணி போன்ற சிறந்த படங்களை இயக்கி பெயர் பெற்ற பிரதீப் சர்க்கார் பினோதினி வாழ்க்கை படத்தை டைரக்டு செய்கிறார்.

''நாடு போற்றும் பெருமை பெற்ற பினோதினி சுயசரிதையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இயக்குனர் பிரதீப் சர்க்கார் படங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகை. இப்பொழுது அவருடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது" என்று கங்கனா ரணாவத் தெரிவித்தார். மணிகர்ணிகா, தலைவி, இப்போது நடித்து வரும் எமர்ஜென்சி படங்களுக்குப் பிறகு கங்கனா நடிக்கும் நான்காவது பயோபிக் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story