தங்கலானை வாழ்த்திய 'கங்குவா'


Kanguva greeted thangalaan
x

'தங்கலான்' திரைப்படம் வெற்றியடைய 'கங்குவா' வாழ்த்து தெரிவித்துள்ளது.

சென்னை,

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் 'கங்குவா'. இப்படத்தில், சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் அக்டோபர் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் 24 மணி நேரத்தில் 2 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் இணைந்து தயாரித்துள்ளன. ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகியுள்ள மற்றொரு திரைப்படம் 'தங்கலான்'.

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், 'தங்கலான்' திரைப்படம் வெற்றியடைய 'கங்குவா' வாழ்த்து தெரிவித்துள்ளது. இது குறித்து சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில், 'தங்கலானின் வெற்றி மிகப்பெரியதாக இருக்கும்', என்று பதிவிட்டுள்ளார்.


Next Story