43 வயதில் 3 குழந்தைகளின் தாயான பாலிவுட் பாடகி கனிகா கபூர் திருமணம்
43 வயதில் 3 குழந்தைகளின் தாயான பாலிவுட் பாடகி கனிகா கபூர் தனது காதலரை லண்டனில் திருமணம் செய்து கொண்டார்.
லண்டன்:
பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு லண்டனில் திருமணம் நடைபெற்றது.
இந்தியில் ராகினி எம்எம்எஸ் 2 படத்தில் பேபி டோல்மே டோல்னே தே, புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலின் இந்தி பதிப்பு உள்பட பல பாடல்களை பாடியவர் கனிகா கபூர். தமிழிலும் பாடியுள்ளார்.
அயனா, சமாரா மற்றும் யுவராஜ் ஆகிய மூன்று குழந்தைகளுக்கு தாயான பாலிவுட் பாடகி கனிகா கபூர் 43 வயதில் விவாகரத்து ஆன 10 வருடத்திற்கு பிறகு 20 மே 2022 அன்று தனது காதலர் கவுதம் ஹதிரமணியை லண்டனில் திருமணம் செய்து கொண்டார்.இருவரின் திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.பிங்க் நிற லெஹெங்காவை அணிந்திருந்தார், அதே நேரத்தில் ஹாதிரமணி பழுப்பு நிற ஷெர்வானியை அணிந்திருந்தார்.
இவர் லண்டனை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் ஹதிராமனி என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்களின் திருமணம் லண்டனில் நடந்தது. இதில் இரு குடும்பத்தார்கள், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து பாடுவேன் என கனிகா கபூர் கூறியுள்ளார்.