ஒரே நாளில் வெளியாக இருக்கும் கார்த்தி, சிவகார்த்திகேயன் படங்கள்


ஒரே நாளில் வெளியாக இருக்கும் கார்த்தி, சிவகார்த்திகேயன் படங்கள்
x

கார்த்தியின் விருமன் படமும், சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய படமும் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது.

சென்னை,

அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவருகிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த திரைப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும், உக்ரைனை சேர்ந்த மரியா என்பவர் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த படமானது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த படம் வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதூர்த்தி அன்று திரையரங்கில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கெனவே கார்த்தி நடிக்கும் விருமன் திரைப்படமானது விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருந்தது. இதனால், சிவகார்த்திகேயனின் படமும், கார்த்தியின் விருமன் படமும் ஒரே நாளில் மோத உள்ளது.

இதற்கு முன்பு கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி கார்த்தியின் தம்பி படமும், சிவகார்த்திகேயனின் ஹீரோ படமும் ஒரே நாளில் வெளியானது. இரு படங்களுக்கும் நல்ல விமர்சனம் கிடைத்த நிலையில், மீண்டும் இருவரின் படங்களிளும் ஒரே நாளில் வெளியாக இருப்பது ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தியுள்ளது.


Next Story