நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண புகைப்படம் வெளியானது...!
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண புகைப்படம் வெளியானது
Live Updates
- 9 Jun 2022 6:41 PM IST
விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண நிகழ்ச்சிகள் நிறைவடைந்தது.
- 9 Jun 2022 6:36 PM IST
" கெட்டி மேளம்.. கெட்டி மேளம்.." தாலி கட்டிய விக்னேஷ் சிவன்...வெட்கப் புன்னகையுடன் நயன்தாரா
- 9 Jun 2022 4:45 PM IST
தங்கமே ,என் உயிர் ,என் கண்மணி ,இப்போது என் மனைவி என தனது டுவிட்டர் பக்கத்தில் விக்னேஷ் சிவன் சில புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்
From Nayan mam … to Kadambari … to #Thangamey …. to my baby ….. and then my Uyir … and also my Kanmani ….. and now … MY WIFE 😇☺️😍😘❤️🥰🥰😘❤️😇😇😍😍 #WikkiNayanWedding #WikkiNayan pic.twitter.com/5J3QT71ibh
— Vignesh Shivan (@VigneshShivN) June 9, 2022 - 9 Jun 2022 3:23 PM IST
நயன்தாரா , விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.
- 9 Jun 2022 2:59 PM IST
தமிழகத்தில் முதல் முறையாக....! நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சி ஓடிடியில் வெளியீடு?
திருமண நிகழ்வுகளை சிடி, டிவிடிகளில் பார்த்த காலம் மாறி, தற்போது ஓடிடியில் பார்க்கும் காலம் வந்துள்ளது.
பெரிய நட்சத்திரங்களின் திருமண நிகழ்வு ஒளிபரப்பு உரிமை ஓடிடி தளங்களுக்கு விற்கப்படுவது புது டிரெண்டாக மாறியுள்ளது.மேற்கு உலக நாடுகளில் நட்சத்திரங்களின் திருமண புகைப்படங்களையம், வீடியோக்களையும் பத்திரிகைகள், தனியார் டிவி சேனல்கள் உரிமம் பெற்று ஒளிபரப்புவது வழக்கமான ஒன்று. அதே பாணியை தற்போது இந்திய நட்சத்திரங்கள் கடைபிடிக்க தொடங்கி உள்ளனர்.
கத்ரீனா கைப், விக்கி கவுஷல் திருமண நிகழ்வு அமேசான் ஒடிடி தளத்திற்கு அளிக்கப்பட்டிருந்தது. பெரிய கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற அவர்களின் திருமண நிகழ்வை 80 கோடி ருபாய்க்கு அமேசான் வாங்கியதாக செய்திகள் வெளிவந்தன.
கத்ரீனா கைப் விக்கி கவுஷல் ஜோடியை தொடர்ந்து ஆலியா பட், ரன்பிர் கபூர் திருமண நிகழ்வின் உரிமும் பெயர் குறிப்பிடாத ஒடிடி தளத்திற்கு வழங்கப்பட்ட்டது. இதற்காக அந்த நிறுவனம் 110 கோடி ருபாய் ஆலியா பட், ரன்பிர் கபூருக்கு வழங்கி உள்ளதாகவும் செய்தி வெளியானது.
இந்த நடைமுறையை தமிழுக்கு முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது நயன்தாரா- விக்னேஷ் ஜோடி.திருமண நிகழ்வை பதிவு செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதே இந்த கட்டுப்பாடுகளுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. நயன்தாரா திருமண நிகழ்வை டாக்குமெண்ட்ரி வடிவில் தயாரித்து தனியார் ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இயக்குநர் கவுதம் மேனன் இயக்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- 9 Jun 2022 2:54 PM IST
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண புகைப்படம் வெளியானது .விக்னேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் .
On a scale of 10…
— Vignesh Shivan (@VigneshShivN) June 9, 2022
She’s Nayan & am the One ☝️☺️😍🥰
With God’s grace , the universe , all the blessings of our parents & best of friends
Jus married #Nayanthara ☺️😍🥰 #WikkiNayan #wikkinayanwedding pic.twitter.com/C7ySe17i8F - 9 Jun 2022 2:26 PM IST
நயன்தாரா விக்னேஷ்சிவன் திருமண விருந்து...! பலாப்பழ பிரியாணி முதல் பாதாம் அல்வா வரை...!
நடிகை நயன்தாராவின் திருமண விழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று காலை திருமணம் முடிந்த நிலையில், தற்போது பிரபலங்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்வில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்டோர் நேரில் வந்து விக்கி - நயன் ஜோடியை வாழ்த்தினர்.
திருமணத்தை ஒட்டி இன்று மதியம் தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள், மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய கோயில்களில் ஏழை எளிய மக்களுக்கு கல்யாண விருந்தை வழங்க நட்சத்திர தம்பதிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க இவர்களது திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்களுக்கு பரிமாறப்பட்ட உணவுகளின் பட்டியல் அடங்கிய மெனு வெளியாகி உள்ளது.
* பன்னீர் பட்டாணிக்கறி
* பருப்புக் கறி
* அவியல்
* மோர்க் குழம்பு
* மிக்கன் செட்டிநாடு கறி (வேகன் உணவு)
* உருளைக் கார மசாலா
* வாழைக்காய் வருவல்
* சேனக்கிழங்கு வருவல்
* சேப்பக்கிழங்கு புளிக்குழம்பு
* காளான் மிளகு வறுவல்
* கேரட் பீன்ஸ் பொரியல்
* காய் பொரிச்சது
* பொன்னி ரைஸ்
* பலாப் பழ பிரியாணி
* சாம்பார் சாதம்
* தயிர் சாதம்
* பூண்டு மிளகு ரசம்
* தயிர்
* பாதாம் அல்வா
* இளநீர் பாயாசம்
* கேரட் ஐஸ் கிரீம்