படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகைகள் மீது பாலியல் வன்கொடுமை


படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகைகள் மீது பாலியல் வன்கொடுமை
x

நடிகைகளில் ஒருவர் தற்போது கண்ணூரிலும் மற்றொருவர் கொச்சியிலும் உள்ளனர். எனவே அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்ய பெண் எஸ்ஐ தலைமையிலான போலீசார் சென்று உள்ளனர்.

கோழிக்கோடு

பிரபல மலையாள நடிகைகள் சானியா ஐயப்பன் மற்றும் கிரேஸ் ஆண்டனி ஆகியோர் படக்குழுவினர் கோழிக்கோடில் உள்ள ஷாப்பிங் மாலில் மலையாள படமான 'சட்டர்டே நைட்' (சனிக்கிழமை இரவு) படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிககு சென்று இருந்தனர்.அப்போது அங்கு கூட்டம் கூடியது.கூட்டத்தில் இளம் நடிகைகள் மீது பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர்கள் அளித்த புகாரின் பேரில் கோழிக்கோடு பாண்டிரங்கான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

நடிகைகளில் ஒருவர் தற்போது கண்ணூரிலும் மற்றொருவர் கொச்சியிலும் உள்ளனர். எனவே அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்ய பெண் எஸ்ஐ தலைமையிலான போலீசார் சென்று உள்ளனர்.

தங்களுக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து நடிகை கிரேஸ் ஆண்டனி தனது சமூக வலைதளத்தில் கூறி இருப்பதாவது:-

இன்று, எனது புதிய படத்தின் புரோமோஷனின் ஒரு பகுதியாக, கோழிக்கோடு ஹை லைட் மாலில் நடந்த புரோமோஷனுக்கு சென்று இருந்தோம். அங்கு ​​எனக்கு ஒரு சிலிர்ப்பான அனுபவம் ஏற்பட்டது. கோழிக்கோடு எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்று. ஆனால் நிகழ்ச்சி முடிந்ததும், கூட்டத்தில் இருந்த ஒருவர் என்னைப் பிடித்தார். எங்கே என்று சொல்ல நான் வெறுக்கிறேன். இப்படி விரக்தியடைந்தவர்கள் நம்மைச் சுற்றி இருக்கிறார்களா?

புரோமோஷனின் ஒரு பகுதியாக எங்கள் மொத்தக் குழுவும் பல இடங்களுக்குச் சென்றோம். இன்று மிக மோசமான அனுபவம். என்னுடன் இருந்த மற்றொரு சக நடிகைக்கும் இதே அனுபவம் இருந்தது. ஒரு கணம் உறைந்து போனேன். அந்த உணர்வின்மையில் இருந்து கேட்கிறேன். உங்கள் நோய் தீர்ந்துவிட்டதா? என கேள்வி எழுப்பினார்.

தங்களுக்கு ஏற்பட்ட அவலத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொண்ட சானியா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " நானும் எனது படக்குழுவினரும் எங்களின் புதிய திரைப்படமான 'சனிக்கிழமை இரவு' திரைப்படத்தை லோழிகோட்டில் உள்ள ஒரு மாலில் விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தோம். விளம்பர நிகழ்வுகள் கோழிக்கோடு மற்றும் அனைத்து இடங்களிலும் சிறப்பாக நடந்தன. கோழிக்கோடு மக்களின் அன்புக்கு நன்றி. மாலில் நடந்த நிகழ்வு மிகவும் மக்களால் நிரம்பியிருந்தது, கூட்டத்தைக் கையாளவும் பராமரிக்கவும் பாதுகாப்புப் படையினர் சிரமப்பட்டனர்," என்று அவர் பகிர்ந்து கொண்டார்.

மேலும் அவர் "நிகழ்ச்சிக்குப் பிறகு, நானும் என் சக நடிகர்களில் ஒருவரும் வெளியேறினோன், சிலர் என் சக நடிகையிம் தவறாக நடந்துகொண்டார்கள், கூட்டத்தின் காரணமாக அவருக்குப் எதிர்வினையாற்ற கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பிறகு, இதேபோன்ற பெண் வெறுப்பு செயலை நானும் சந்தித்தேன், நீங்கள் வீடியோவில் பார்த்தது போல் நான் அதிர்ச்சியுடன் அதற்கு பதிலளித்தேன் என கூறினார்.

கோழிக்கோடு பாலாழியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக கேரளாவில் புதிய படத்தின் புரோமோஷனுக்காக நடிகர், நடிகைகள் குழு பல்வேறு மால்கள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர்.




Next Story