நாளை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்: தனியார் ஓடிடியில் நேரடி ஒளிபரப்பு - பங்கேற்கும் பிரபலங்கள்...!
முக்கிய விருந்தினர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்படும் என்றும், அது இல்லாமல் அரங்கிற்குள் நுழைய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
நடிகை நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும் 6 வருடங்களாக காதலித்து வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. திருப்பதியில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், திருமண மண்டபத்தை நேரில் சென்று பார்த்து வந்ததாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் மாமல்லபுரத்தில் நாளை (9-ந் தேதி) நடக்கிறது. இதனை அதிகாரபூர்வமாக விக்னேஷ் சிவன் அறிவித்து உள்ளார்.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் மாமல்லபுரத்தில் நாளை (9-ந் தேதி) நடக்கிறது.
இது குறித்து விக்னேஷ் சிவன் கூறி உள்ளதாவது:-
தொழில் ரீதியாக உங்கள் ஆசிர்வாதம் எனக்கு எப்படி இருந்ததோ, அதுபோலவே எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் அந்த ஆசீர்வாதங்கள் தேவை. எனது தனிப்பட்ட வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்கிறேன்.
ஜூன் 9 ஆம் தேதி, என் காதலியை திருமணம் செய்து கொள்கிறேன். நயன்தாரா, குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் மகாபலிபுரத்தில் திருமணம் நட்க்கிரது. முதலில், திருப்பதி கோவிலில் திருமணம் செய்ய திட்டமிட்டோம், ஆனால் சில பிரச்சனைகளால் நடக்கவில்லை. எங்கள் திருமண புகைப்படங்களை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம். ஜூன் 11 மதியம், நானும் நயன்தாராவும் உங்களை (ஊடகங்களை) சந்திப்போம், நாம் ஒன்றாக மதிய உணவு சாப்பிடுவோம் என கூறி உள்ளார்.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் திருமணத்தில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்கிறார்கள் திருமண இடத்திற்கு வெளியே பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது . முக்கிய விருந்தினர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்படும் என்றும், அது இல்லாமல் அரங்கிற்குள் நுழைய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை ஜூன் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் திருமணம் நடைபெற உள்ளது. வங்காள விரிகுடாவை பின்னணியாகக் கொண்டு அமைக்கப்பட்ட பிரத்யேக பின்னணியில் இந்து முறைப்படி விழா நடைபெறவுள்ளது.
தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, சூர்யா, அஜித், கார்த்தி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சமந்தா ரூத் பிரபு ஆகிய இந்தியத் திரையுலகின் மிகப் பெரிய பெயர்கள் இந்த விருந்தினர் பட்டியலில் இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திருமண விழாவை இயக்குனர் கவுதம் மேனன் திருமண விழாவை இயக்குவார், இது ஆவணப்படமாக தயாரிக்கப்படுகிறது. பின்னர் ஒடிடி தளத்திற்கு விற்கப்படும். பெரும் விலைக்கு. திருமண ஆவணப்படம் நெட்ஃபிக்ஸ் இல் திரையிடப்படும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் நேற்று இரவு நயன்தாராவுக்கான மெஹந்தி விழா அதே இடத்தில் மிக நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் இரு தரப்பு நண்பர்களுடன் நடந்தது.
விருந்தினர்களுக்கு மணமகனும், மணமகளும் தங்கள் காதல் கதையின் வெவ்வேறு நிலைகளை சித்தரிக்கும் பல்வேறு காதல் போஸ்களில் இருக்கும் புகைப்படங்கள் கொண்ட தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு அழகான பரிசுகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அது அவர்களுக்கு மறக்கமுடியாததாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்தை பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அழைப்பிதழின் படி, 'எத்னிக் பேஸ்டல்' என்பது பிரமாண்ட திருமணத்திற்கான தீம்.
தற்போது திருமண அழைப்பிதழ் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இருப்பினும், இது அதிகாரப்பூர்வ அழைப்பு என இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
அந்த திருமண அழைப்பிதழில் "எல்லாம் வல்ல இறைவனின் ஆசியுடன், எங்கள் பெரியோர்கள் மற்றும் பிரபஞ்சத்தின் ஆசீர்வாதத்துடன், திரு குரியன் கொடியாட்டி மற்றும் திருமதி ஓமனா குரியன் ஆகியோரின் மகள் நயன்தாரா மற்றும் மறைந்த திரு சிவக்கொழுந்து மகன் விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமண விழாவிற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். திருமதி மீனாகுமார்." திருமண விழா நடைபெறும் தேதி, நேரம் மற்றும் இடம் போன்றவற்றையும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.