ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'கள்வன்' படத்தின் புதிய அப்டேட்


ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள கள்வன் படத்தின் புதிய அப்டேட்
x

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'கள்வன்' திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இவர் நடித்த 'பேச்சுலர்', 'ஐங்கரன்', 'ஜெயில்' போன்ற படங்கள் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இவர் அறிமுக இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் 'கள்வன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்த படத்தில் பாரதிராஜா, இவானா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கள்வன்' திரைப்படத்தின் டீசரை இன்று (13.01.2023) மாலை 4.44 மணிக்கு நடிகர் சூர்யா வெளியிடுவார் என்று ஜி.வி. பிரகாஷ் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.



Next Story