வீட்டு ரகசியங்களை வெளியிட்ட பின்னணி பாடகி நிவேதிதா
டி.வி.நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாடகி நிவேதிதா தனது வீட்டின் ரகசியங்களை வெளியிட்டு இருக்கிறார்.
கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்ற பிரபல பாடகர் சந்தன் ஷெட்டியும், பின்னணி பாடகி நிவேதிதா கவுடாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் கொரோனா காலத்தில் நடந்தது. திருமணம் முடிந்து 1½ ஆண்டுகள் ஆன நிலையில் சந்தன் ஷெட்டியும், நிவேதிதாவும் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் டி.வி.நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நிவேதிதா தனது வீட்டின் ரகசியங்களை வெளியிட்டு இருக்கிறார். அதாவது நான் வீட்டில் சமையல் செய்வது இல்லை. திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகியும் இன்னும் எனது வீட்டில் நாங்கள் முதன்முதலாக வாங்கிய கியாஸ் சிலிண்டர் காலியாகவில்லை. அந்த சிலிண்டர் இன்னும் பல மாதங்களுக்கு உபயோகமாகும் நிலையில் உள்ளது என்றார். இதன்மூலம் நிவேதிதா வீட்டில் சமையல் செய்வதே இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.
Related Tags :
Next Story