தெருக்களில் பிச்சை எடுக்கும் பிரபல நடிகை வைரலாகும் வீடியோ


தெருக்களில் பிச்சை எடுக்கும் பிரபல நடிகை வைரலாகும் வீடியோ
x

பிரபல நடிகை நுபுர் அலங்கர் தெருக்களில் பிச்சை எடுக்கும் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

மும்பை

இந்தி நடிகை நுபுர் அலங்கர். இவர் ராஜா ஜி, சாவரியா, சோனாலி கேபிள் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

சின்னத்திரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சக்திமான் தொலைக்காட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவரது கணவர் அலங்கார் ஸ்ரீவத்சவாவும் நடிகர்.

சுமார் 27 வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்த நுபுர் அலங்காருக்கு 49 வயது ஆகிறது. சில மாதங்களுக்கு முன்பு நுபுர் அலங்கர் சினிமாவை விட்டு விலகி காவி உடை அணிந்து சன்னியாசியாக மாறினார்.

சினிமாவில் இனிமேல் நடிக்க மாட்டேன் என்றும் வாழ்க்கையில் இப்போது நிம்மதியாக இருக்கிறேன் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது உத்திரப்பிரதேசம் கோவர்தனில் உள்ள தங்கடி அருகே நுபுர் அலங்கர் காவி உடை அணிந்து பிச்சை எடுத்தபடி இருக்கும் புகைப்படமும் வீடியோவும் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

நுபுர் அலங்கர் சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். இவர் தனது வாழ்க்கை தொடர்பான விஷயங்களை சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில், அவர் தெருக்களில் பிச்சை எடுக்கும் வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

வீடியோவில் நடிகை நாள் முழுவதும் 11 பேரிடம் பிச்சை எடுக்க வேண்டும் என்று கூறுவதைக் காணலாம். வீடியோவைத் தவிர, நுபுர் தனது புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். ஒரு புகைப்படத்தில், நுபுர் ஒருவரிடமிருந்து பிச்சை எடுப்பதைக் காணலாம், மற்றொரு புகைப்படத்தில் அவர் தனது பிச்சைக் கிண்ணத்தைப் பகிர்ந்துள்ளார், அதில் இது தனது முதல் பிச்சை என்று தலைப்பில் கூறியுள்ளார்.

இது குறித்து நுபர் அலங்கர் கூறும்போது, ''சில காலமாக எனது குடும்பத்தில் நிறைய பிரச்சினைகள் ஏற்பட்டன. அந்த சமயத்தில் எனது குருவின் ஆலோசனையால் நான் சன்னியாசத்தை ஏற்றுக் கொண்டேன். பிச்சை எடுப்பதால் கொஞ்சம் பணம் கிடைக்கிறது. தற்போது வாழ்க்கை இப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது'' என்றார்.




Next Story