பிரதமர் மோடியின் தாயார் மறைவு: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் செய்துள்ளார்.
காந்திநகர்,
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று அதிகாலை உயிரிழந்தார். தாயார் மறைவு செய்தி கேட்டதும் உடனடியாக குஜராத் சென்ற பிரதமர் மோடி, தனது தயார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடைபெற்றது. இதையடுத்து காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது. தாயின் சிதைக்கு பிரதமர் மோடி தீ மூட்டினார்.
இந்த நிலையில் பிரதமரின் தாயார் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், மாநில முதல்-மந்திரிகள், சினிமா பிரபலங்கள் உளிட்டோர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பிரதமர் மோடியின் தாயார் மறைவையொட்டி நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
மரியாதைக்குரிய பிரதமர் மோடி அவர்களே, உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள இடு செய்ய முடியாத இழப்பிற்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.