'பொன்னியின் செல்வன்' படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ. 80 கோடி வசூல்!


பொன்னியின் செல்வன் படம் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ. 80 கோடி வசூல்!
x
தினத்தந்தி 1 Oct 2022 8:25 AM GMT (Updated: 1 Oct 2022 10:53 AM GMT)

பொன்னியின் செல்வன் முதல் நாளில் மட்டும் ரூ.75 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை

பொன்னியின் செல்வன், கல்கி கிருஷ்ணமூர்த்தியின் அதே பெயரில் நாவலை அடிப்படையாகக் கொண்டது. இது முதன்முதலில் 1955 இல் வெளியிடப்பட்டது. மணிரத்னம் இயக்கி உள்ள இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரபு, ஆர் சரத்குமார் , விக்ரம் பிரபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர், இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் நேற்று தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே 2 வாரங்களுக்கான டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டு சாதனை படைத்தது. இதனால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது.

இப்படம் முதல் நாளில் வசூலை வாரிக் குவித்து உள்ளது.

உலகம் முழுவதும் 5000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான பொன்னியின் செல்வன், 2022ஆம் ஆண்டு தமிழ்நாட்டில், முதல் நாளில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

அதன்படி இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.75 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.25 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும், அதேபோல் இப்படத்தின் இந்தி பதிப்பு ரூ.15 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்திய அளவில் ரூ.42 கோடி வசூல் என தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய தமிழ் படம் என்கிற சாதனையையும் பொன்னியின் செல்வன் படைத்துள்ளது.

இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் பொன்னியின் செல்வன் ரூ.8௦ கோடி வசூல் செய்து உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.




Next Story