'பொன்னியின் செல்வன்' படத்தின் புதிய பாடல் வெளியீடு
மிகவும் வித்தியாசமான முறையில் உருவாகியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து ட்ரெண்டாகி வருகிறது.
கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின்செல்வன்". இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் அதிகப்படுத்தியுள்ளது. மேலும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து படக்குழுவினர் தீவிரமாக புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் 'தேவராளன் ஆட்டம்' பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மிகவும் வித்தியாசமான முறையில் உருவாகியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து ட்ரெண்டாகி வருகிறது.