கவனம் ஈர்க்கும் பிரபாஸின் ராமர் தோற்றம்
‘ஆதிபுருஷ்’ படக்குழுவினர் புதிதாக வெளியிட்ட பிரபாஸின் ராமர் தோற்றம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
'பாகுபலி' படம் மூலம் இந்தியா முழுவதும் கவனம் பெற்றவர் பிரபாஸ். இவரது நடிப்பில் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகும் 'ஆதிபுருஷ்' படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இதில் பிரபாஸ் ராமராகவும், சயீப் அலிகான் ராவணனாகவும், கீர்த்தி சனோன் சீதையாகவும் நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் ராவணன் கதாபாத்திரத்தை தவறாக சித்தரித்து இருப்பதாகவும், பொம்மைபடம் போன்று இருப்பதாகவும் விமர்சிக்கப்பட்டன. சிலர் கோர்ட்டுக்கும் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் படக்குழுவினர் புதிதாக வெளியிட்ட பிரபாஸின் ராமர் தோற்றம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆரம்பத்தில் விமர்சித்தவர்களையும், இந்தத் தோற்றம் கவர்ந்து இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர். `ஆதிபுருஷ்' படம் ரூ.500 கோடி செலவில் தயாராவதாக தகவல்.