ராயன் படத்தின் 3-வது பாடல் - நாளை வெளியாகிறது
ராயன் படத்தின் 3-வது பாடல் ‘ராயன் ரம்பிள்’ நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை,
நடிகர் தனுஷின் 50-வது படமாக உருவாகும் 'ராயன்' திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் இயக்கி நடிக்கும் இந்த படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். வடசென்னையை கதைக்களமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இருந்து 'அடங்காத அசுரன்', 'வாட்டர் பாக்கெட்' ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன.
இந்நிலையில், ராயன் படத்தின் 3-வது பாடல் 'ராயன் ரம்பிள்' நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 6-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story