இனி புதுமுக டைரக்டர்களுக்கு நோ...! மீண்டும் அனுபவம் நிறைந்த பி. வாசுவுக்கு வாய்ப்பு


இனி புதுமுக டைரக்டர்களுக்கு நோ...! மீண்டும் அனுபவம் நிறைந்த பி. வாசுவுக்கு வாய்ப்பு
x

சிறுத்தை சிவா இயக்கிய 'அண்ணாத்த' படத்தில் தங்கை செண்டிமென்ட் காட்சியில் நடித்து ரசிகர்கள் மனதை கலங்க வைத்தார்.

சென்னை

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமாருடன் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து தயாரிப்பாளர் சுபாஸ்கரனுடன் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

அதில் ஒன்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும்'லால் சலாம்'. அடுத்து 'தலைவர் 171' என்று அழைக்கப்படும் படம். இந்த படத்தை பி வாசு இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன் தயாரிப்பு பிரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இப்படத்தை பி வாசு இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இயக்குநர் வாசு இதற்கு முன்பு ரஜினிகாந்துடன் 'பணக்காரன்', 'மன்னன்', 'சந்திரமுகி', 'குசேலன்' ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளார். பி வாசு தற்போது ராகவா லாரன்ஸை வைத்து 'சந்திரமுகி 2' படத்தை எடுத்து வருகிறார். ரஜினிகாந்துக்கான புதிய படத்தின் ஸ்கிரிப்ட் தயாரிக்க படப்பிடிப்பில் இருந்து ஒரு சிறிய இடைவெளி எடுத்துக்கொள்வதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த், 'ஜெயிலர்' படப்பிடிப்பிற்குப் பிறகு, இளம் இயக்குனர்களில் ஒருவரான பிரதீப் ரங்கநாதன் அல்லது சிபி சக்ரவர்த்தி படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. இருப்பினும், நடிகர் ரஜினிகாந்த் இன்னும் ஸ்கிரிப்டைத் தேர்ந்தெடுக்காததால் யாருடன் ஒத்துழைக்கிறார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. வரும் நாட்களில் சூப்பர் ஸ்டாரின் எதிர்கால திட்டங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த், கடந்த சில வருடங்களாகவே புதுமுக இயக்குனர்களுக்கு தன்னுடைய படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்து வருகிறார். அந்த விதத்தில் 'கபாலி' படத்தை இயக்குனர் பா ரஞ்சித் இயக்கியிருந்தார். இதைத்தொடர்ந்து மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் 'காலா' படத்தில், இரண்டாவது முறையாக இணைந்தார்.

பின்னர் இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கிய, 'பேட்ட' படத்தில் நடித்தார். அதே போல் கடைசியாக, சிறுத்தை சிவா இயக்கிய 'அண்ணாத்த' படத்தில் தங்கை செண்டிமென்ட் காட்சியில் நடித்து ரசிகர்கள் மனதை கலங்க வைத்தார்.

தற்போது மீண்டும் இளம் இயக்குனர்களில் ஒருவரான நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து புதுமுக இயக்குனர்களுக்கு அதிக வாய்ப்பை அள்ளிக் கொடுத்து வரும் ரஜினிகாந்த், அடுத்தடுத்து இளம் இயக்குனர்கள் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிரடி தன்னுடைய முடிவை மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.



Next Story