சாகாமல் தான் இருக்கிறேன், எதிர்த்துப்போராடுவேன் - விமர்சர்களுக்கு நடிகை சமந்தா பதிலடி


சாகாமல் தான் இருக்கிறேன், எதிர்த்துப்போராடுவேன் - விமர்சர்களுக்கு நடிகை சமந்தா பதிலடி
x
தினத்தந்தி 8 Nov 2022 3:56 PM IST (Updated: 8 Nov 2022 3:58 PM IST)
t-max-icont-min-icon

பல விஷயங்களை கடந்து இவ்வளவும் தூரம் வந்தவள் நான் என நடிகை சமந்தா கூறியுள்ளார்.

சென்னை,

சமந்தா, சமீபத்தில் தனது சமூக ஊடக பதிவின் மூலம் தான் மயோசிடிஸ் (Myositis) என்ற ஆட்டோ இம்யூன் கோளாறால்(autoimmune disorder) பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருந்தார். அத்துடன் தான் தொடர் சிகிச்சையில் இருந்து வருவதாகவும், விரைவில் குணமடைந்து விடுவேன் என்றும் அந்த பதிவில் சமந்தா ரூத் பிரபு குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், நடிகை சமந்தா நடித்து நவம்பர் 11ம் திகதி வெளிவர இருக்கும் யசோதா திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் சமந்தா கலந்து கொள்ள உள்ளார்.

இந்தநிலையில், இன்ஸ்டாகிராமில் நான் சொன்னபடி சில தினங்கள் நல்ல நாட்களாகவும் சில நாட்கள் மோசமான நாட்களாகவும் இருக்கிறது. எனது உடல்நிலை உயிருக்கே ஆபத்தாக உள்ளது என செய்திகள் பரவி வருகிறது. இந்த கணம் வரையிலும் நான் சாகாமல் தான் இருக்கிறேன்.

மிகவும் கஷ்டமான நிலையில் தான் இருக்கிறேன், ஆனாலும் எதிர்த்துப்போராடுவேன், பல விஷயங்களை கடந்து இவ்வளவும் தூரம் வந்தவள் நான் என கூறியுள்ளார்.


Next Story