வித்தியாசமான தோற்றத்தில் சரத்குமார்
சரத்குமார் பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் அவரது தோற்றம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.
சரத்குமார் பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது தோற்றம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. இதில் சரத்குமார் வித்தியாசமான தோற்றத்தில் கம்பீரமாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். இதுபோல் சின்ன பழுவேட்டரையராக நடிக்கும் பார்த்திபன் தோற்றமும் வெளியாகி இருக்கிறது.
சரத்குமார் வானம் கொட்டட்டும் படத்துக்கு பிறகு தெலுங்கு, கன்னட படங்களில் நடித்தார். தமிழ், தெலுங்கில் தயாராகும் வாரிசு படத்தில் விஜய்யுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆழி, ருத்ரன் ஆகிய படங்களும் கைவசம் உள்ளன. டைரக்டர் விக்ரமன் மகன் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகும் ஹிட் லிஸ்ட் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story