சென்னையில் ரசிகர்களை சந்தித்த ஷாருக்கான்


சென்னையில் ரசிகர்களை சந்தித்த ஷாருக்கான்
x

சென்னையில் ரசிகர்களை ஷாருக்கான் சந்தித்தார்,

தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான அட்லி தற்போது இந்தியில் ஜவான் படத்தை டைரக்டு செய்து வருகிறார். இதில் நாயகனாக ஷாருக்கான், நாயகியாக நயன்தாரா நடிக்கின்றனர். வில்லனாக விஜய்சேதுபதி வருகிறார். பிரியாமணி, யோகிபாபு ஆகியோரும் உள்ளனர். ஜவான் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக சென்னையில் நடந்தது. இதற்காக ஷாருக்கான் சென்னை வந்து முகாமிட்டு படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வந்தார். இந்த நிலையில் சென்னையில் உள்ள ஷாருக்கான் ரசிகர்கள் அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து படப்பிடிப்புக்கு இடையில் சென்னை ரசிகர்களை ஷாருக்கான் சந்தித்தார். ரசிகர்களை தான் தங்கி இருந்த 5 நட்சத்திர ஓட்டலுக்கு வரவழைத்தார். அங்கு அவர்களுக்கு அறைகள் ஒதுக்கி தங்க வைத்து விரும்பிய உணவை சாப்பிட வைத்து விருந்து கொடுத்தார். சிறிதுநேரம் அவர்களுடன் ரசிகர் மன்ற பணிகள் குறித்து பேசினார். பின்னர் ரசிகர்களுடன் தனித்தனியாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். ரசிகர்களை ஷாருக்கான் சந்தித்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.


Next Story