படப்பிடிப்பில் விபத்து: நடிகர் விஷால் காயம்


படப்பிடிப்பில் விபத்து: நடிகர் விஷால் காயம்
x

படப்பிடிப்பில் சண்டை காட்சியின்போது விஷாலுக்கு எதிர்பாராத விதமாக பலத்த காயமடைந்தார்.

விஷால் 'மார்க் ஆண்டனி' என்ற படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படத்தில் நாயகியாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து பிரபலமான ரிதுவர்மா நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னை செங்குன்றம் அருகே நடந்து வருகிறது. கல்குவாரியில் நடனம் ஆடியபடி வில்லன்களுடன் விஷால் ஆக்ரோஷமாக மோதும் சண்டை காட்சியை படமாக்கி வந்தனர். இந்த நிலையில் படப்பிடிப்பில் சண்டை காட்சியின்போது விஷாலுக்கு எதிர்பாராத விதமாக பலத்த அடிபட்டது. கால் முட்டியில் காயம் ஏற்பட்டது. உடனடியாக படக்குழுவினர் விஷாலை அருகில் இருந்த ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு விஷாலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு அவர் ஓய்வு எடுத்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்தனர். விபத்தை தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ஏற்கனவே ஐதராபாத்தில் நடந்த லத்தி படப்பிடிப்பிலும் விஷாலுக்கு இரண்டு தடவை காயம் ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெற்றார். கேரளா சென்றும் சிகிச்சை எடுத்து திரும்பினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் காயம் அடைந்துள்ளார்.


Next Story