'காளிதாஸ் 2' படப்பிடிப்பை தொடங்கி வைத்த சிவகார்த்திகேயன்


காளிதாஸ் 2 படப்பிடிப்பை தொடங்கி வைத்த சிவகார்த்திகேயன்
x

பரத் நடிக்கும் 'காளிதாஸ் 2' படத்தின் சூட்டிங்கை சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்துள்ளார்.

சென்னை,

ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படம் மூலம் பரத் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார் . இதை தொடர்ந்து விஷால் நடிப்பில் வெளிவந்த செல்லமே திரைப்படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த காதல் திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதை வென்றார் பரத். அதற்கடுத்து பட்டியல், எம் மகன், வெயில், வானம், காளிதாஸ், 555 போன்ற பலப்படங்களில் நடித்தார்.

இந்நிலையில் அடுத்ததாக பரத், 'காளிதாஸ் 2' எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். கடந்த 2019 -ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் காளிதாஸ். திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படத்தில் பரத் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்றது.

இதன் வெற்றியைத் தொடர்ந்து நான்கு வருடங்கள் கழித்து காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. 'காளிதாஸ் 2' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய ஸ்ரீ செந்தில்தான் இயக்குகிறார். இந்த படத்தை எஸ்கே பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சுரேஷ் பாலா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இதில் பரத்துடன் இணைந்து அஜய் கார்த்தியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பூஜையில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்ட நிலையில் படப்பிடிப்பையும் தொடங்கி வைத்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


Next Story