தனி விமானத்தில் பெங்களூரு சென்றடைந்த நடிகர் ரஜினிகாந்த்...!


தனி விமானத்தில் பெங்களூரு சென்றடைந்த நடிகர் ரஜினிகாந்த்...!
x

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள பெங்களூரு சென்றார் ரஜினிகாந்த்.

பெங்களூரு,

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த 2021 ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரின் இந்த திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இவரின் மறைவையடுத்து திரையுலகில் அவரது கலைப்பணி மற்றும் சமூக சேவை உள்ளிட்டவற்றை கருத்திற்கொண்டு அவருக்கு மிக உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படும் என்று கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்திருந்தார்.

நவம்பர் 1-ந் தேதி கன்னட ராஜ்யோத்சவா தினமான அன்று மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள விருதை வழங்க, தமிழ் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், தனி விமானம் மூலமாக பெங்களூரு சென்றடைந்த நடிகர் ரஜினிகாந்தை கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் வரவேற்றார். இன்று மாலையில், மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள பெங்களூரு சென்றுள்ளார் ரஜினிகாந்த்.


Next Story