ரஜினியின் 'ஜெயிலர்'படத்தில் இணைந்தார் தமன்னா
படக்குழு புதிய புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளது.
சென்னை,
ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. . நெல்சன் திலீப் குமார் டைரக்டு செய்கிறார். 65 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் நடிக்கிறார். அவரது கதாபாத்திரம் வில்லனாக சித்தரிக்கப்பட்டு உள்ளது என்கின்றனர். ரஜினியின் 'படையப்பா' படத்தில் நீலாம்பரியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த ரம்யா கிருஷ்ணனும் 'ஜெயிலர்' படத்தில் இணைந்துள்ளார். மேலும், ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் மலையாள நடிகர் மோகன்லால் , தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோயர் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிகை தமன்னா இணைந்துள்ளார் . இதனை படக்குழு புதிய புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story