சினிமாவில் அறிமுகமாகி 19 ஆண்டுகள் நிறைவு -ஜெயம் ரவி நெகிழ்ச்சி


சினிமாவில் அறிமுகமாகி 19 ஆண்டுகள் நிறைவு -ஜெயம் ரவி நெகிழ்ச்சி
x

ஜெயம் ரவி சினிமாவில் நுழைந்தது 19 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையடுத்து திரைப்பயணத்தில் தனக்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி சினிமாவில் அறிமுகமாகி 19 ஆண்டுகள் ஆகிறது. இதையடுத்து நெகிழ்ச்சியோடு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''என் முதல் படமான ஜெயம் படத்துக்காக முதல்முறையாக கேமராவை எதிர்கொண்ட நினைவு இன்னும் என் நினைவில் இருக்கிறது. இன்று நான் 19 வருடங்களை நிறைவு செய்துள்ளேன். இது ஒரு மேஜிக் போல் தெரிகிறது. இந்த திரைப்பயணத்தின் பின்னணியில் படைப்பாளிகள் மற்றும் வித்தகர்கள் பலர் உள்ளனர். நான் ஒரு நடிகன். அவர்கள் பார்வையை திரையில் மொழிபெயர்த்த ஒரு ஊடகம் மட்டுமே. எனது திறமை மற்றும் ஆர்வத்திற்கு முழு ஆதரவாக எனது தந்தை இருந்துள்ளார்.

என் உத்வேகத்தின் ஆதாரமாக இருந்த திரைத்துறையில் உள்ள எனது மூத்த நடிகர்களுக்கு நன்றி. அவர்களின் இடைவிடாத ஆற்றல், தீராத ஆர்வம் மற்றும் அவர்களின் தொழிலின் மீதான முழுமையான அர்ப்பணிப்பு ஆகியவைதான் என்னை மிகவும் உந்துதலாக வைத்திருக்கின்றன. ரசிகர்களின் நிபந்தனையற்ற அன்பும், ஆதரவும் எனது திறமையை வளர்த்ததோடு மட்டுமில்லாமல், சிறந்த படைப்புகளை வழங்குவதற்கு நிறைய பொறுப்புகளை என்னுள் விதைத்துள்ளது" என்று கூறியுள்ளார்.


Next Story