முத்துவேல் பாண்டியன் அரைவ்ஸ்...! வீடியோவை வெளியிட்டு தெறிக்கவிட்ட 'ஜெயிலர்' படக்குழு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு வீடியோவை வெளியிட்டு 'ஜெய்லர்' படக்குழு! வாழ்த்து தெரிவித்துள்ளது.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் முக்கியமான அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
இதுகுறித்து ஜெயிலர் படத்தின் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ், ரஜினியின் பிறந்தநாளான இன்று, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து, நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தில் அவரது பெயரை குறிக்கும் வகையில் "முத்துவேல் பாண்டியன் இன்று 6 மணிக்கு வருகிறார்" என ட்வீட் செய்து இருந்தது.
இந்தநிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு வீடியோவை வெளியிட்டு 'ஜெய்லர்' படக்குழு! வாழ்த்து தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஜெயிலர் படத்தின் ஃபட்ஸ்ட் லுக் வந்த நிலையில் இன்று இந்த அறிவிப்பு பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.